டெல்லி கலவரத்தை ஒடுக்க முடியலன்னா ராஜினாமா செய்யுங்க: அமித் ஷாவை 'டார்கெட்' செய்த ரஜினி!!

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தமது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்தை வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத் துறையின் தோல்வியே அங்கு நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கு காரணம். உளவுத் துறையின் தோல்வி என்றால், அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்விதான்.